சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

5 hours ago 2

சென்னை : சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் எடுத்த முடிவுகளின் படி சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், வேத பகத் சிங், புருசோத்தமன், செந்தில் முருகன்,பரணிதரன், ஹர்ஷாராஜ் உள்ளிட்ட 8 வழக்கறிஞர்கள் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அஸ்வினி தேவி,சித்தார்த், சரவணன், இந்துபாலா உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக பாஸ்கரன், உதயகுமார் உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.உமாகாந்த், கருணாநிதி,வெங்கட சேசய்யா உள்ளிட்ட 16 வழக்கறிஞர்கள், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக ஆஜராவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரி தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் அஜாராக வழக்கறிஞர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழக்குகளில் அரசு தரப்பிற்கு ஆஜராகி வாதாடுவார்கள்,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article