சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 நீதிபதிகள் இன்று நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பவானி சுப்புராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 நீதிபதிகள் இம்மாதத்தில் ஓய்வு பெறுகின்றனர்.
இதன் காரணமாக நீதிபதிகளின் காலிப்பணிடங்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. இந்நிலையில் கர்நாடகா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகிய இருவரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி கொலிஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி கே.ஆர் ராம் பதவி பிரமானம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2023ம் ஆண்டு குமரப்பன், ராஜசேகர் ஆகியோர் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை உயர் நீதிமன்ற 2 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு appeared first on Dinakaran.