சென்னை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 6 உதவி கமிஷனர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள், 22 எஸ்ஐக்கள் மற்றும் 255 காவலர்கள் என மொத்தம் 321 காவலர்களின் பயன்பாட்டிற்கு என திருச்சி மாவட்டம் துவாக்குடியில் 70 குடியிருப்புகள், கரூர் மாவட்டம் வெள்ளணையில் 29 குடியிருப்புகள், தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் 32 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 39 குடியிருப்புகள், சென்னை ராயப்பேட்டையில் 6 குடியிருப்புகள், சென்னை கொண்டித்தோப்பில் 120 குடியிருப்புகள், ராமாநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 25 குடியிருப்புகள் என மொத்தம் 321 குடியிருப்புகள் ரூ.143.16 கோடி செலவில் கட்டப்படும்.
சென்னை காவல்துறையை தவிர்த்து மற்ற மாநகரங்களுக்காக ரூ.12 கோடி செலவில் 80 இளஞ்சிறப்பு ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும். தற்போது எஸ்ஐக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்கள் மிகவும் பழுதடைந்து உள்தால் 350 நான்கு சக்கர வாகனம் ரூ.38.85 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை தரவிர மற்ற மாநகரங்களுக்கு ரூ.12 கோடி செலவில் 80 இளஞ்சிறப்பு ரோந்து வாகனம் கொள்முதல் செய்யப்படும்.
சிறை கைதிகளின் வழிக்காவலுக்காக ரூ.3.40 கோடி செலவில் 20 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும். காவலர்களின் தளவாடங்களை எடுத்து செல்ல ரூ.2.35 கோடி செலவில் 10 புதிய லாரிகள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ரூ.143.16 கோடி செலவில் 321 புதிய காவலர் குடியிருப்புகள்: பெண்கள் பாதுகாப்புக்கு ரூ.12 கோடியில் 80 ரோந்து வாகனம் appeared first on Dinakaran.