சென்னை ஆவடி அருகே காவல் நிலைய வாசலில் தங்கையை ஆபாசமாகப் பேசிய கார் ஓட்டுநருக்குக் கத்திக் குத்து

2 months ago 11
சென்னை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் வைத்து தனது மைத்துனரைக் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். குரு சத்யா என்பவர், தினசரி குடித்துவிட்டு வந்து மனைவி திவ்யாவை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், திவ்யா போலீசில் புகாரளித்துள்ளார். விசாரணைக்காக இருவரும் காவல் நிலையம் சென்றபோது, திவ்யாவை குரு சத்யா ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த திவ்யாவின் அண்ணன் மகேஸ்வரன், வீட்டுக்குச் சென்று கத்தி ஒன்றை எடுத்து வந்து, குரு சத்யாவின் முதுகில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article