
90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பில் தற்போது 'கராத்தே கிட்' படத்தின் 2-ம் பாகமான 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' உருவாகி உள்ளது.
இதில் ஜாக்கி சான், கராத்தே கிட் படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பென் வாங் லி பாங் என்பவர் புதிய மாணவராக நடிக்கிறார். நடிகர் ரால்ப் மாக்கியோ 'டேனியல் லாருசோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30-ந் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜாக்கிசானுடன் இணைந்து நடித்த அனுபவத்தை பற்றி நடிகர் ரால்ப் மாக்கியோ கூறுகையில், "ஜாக்கிசானுடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு பெரிய அனுபவம். ஒரு கலைஞனாக எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. சினிமா மற்றும் கலைகளில் உன்னத நபரான அவர் ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பாக மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் அவருடைய ஈடுபாட்டுக்கு அளவே இல்லை. இதனால் அவர் சொல்வதை மறுப்பேதும் சொல்லாமல் சரி என கேட்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.