
சென்னை,
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் சம்பத். இவரது மகள் ஐஸ்வர்யா. நேற்று சம்பத், பள்ளி முடிந்ததும் தனது மகள் ஐஸ்வர்யாவை பைக்கில் அழைத்து வந்துள்ளார். வீடு திரும்பியதும், அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டை சிறுமி ஐஸ்வர்யா மூடியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கேட் சிறுமி மீது சரிந்து விழுந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கேட்டை தூக்கி சிறுமியை மீட்டனர். இதில் படுகாயமடைந்த சிறுமி ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.