சென்னை: 4-வது மாடியில் இருந்து குதித்து 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

1 week ago 3

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கிஷோர் (17 வயது). இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கிஷோர் நேற்று மாலை தனது வீடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் தற்கொலை செய்த மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சக மாணவர்கள் தன்னை கிண்டல் செய்வதாக கிஷோர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மாணவர் கிஷோர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article