பணியிடங்கள் விவரம்:
1. Junior Technical Assistant: 2 இடங்கள் (பொது). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ அல்லது 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் கல்வித்தகுதியில் 60% தேர்ச்சி என்றால் ஓராண்டு முன்அனுபவமும், 50%க்கு மேல் தேர்ச்சி என்றால் 2 ஆண்டு முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.22,250-3%-75,000.
2. Junior Technical Assistant: 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் கல்வித்தகுதியில் 60% மதிப்பெண்கள் எடுத்திருந்தால் ஓராண்டு முன்அனுபவமும், 50%க்கு மேல் தேர்ச்சி என்றால் 2 ஆண்டு முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.22,250-3%-75,000.
3. Junior Technical Assistant: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). இவற்றில் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கியுள்ள இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.இ., மற்றும் கல்வித்தகுதியில் 60% மதிப்பெண்கள் எடுத்திருந்தால் ஓராண்டு முன் அனுபவமும், 50%க்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 ஆண்டு முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.22,250-3%-75,000.
4. Technician ‘B’: 2 இடங்கள் (பொது). இந்த 2 இடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் எலக்ட்ரிக்கல் பாடத்தில் ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன்அனுபவம். சம்பளம்: ரூ.19,000-3%-60,000
5. Technician ‘B’: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). தகுதி: எஸ்எஸ்எல்சி யுடன் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம். சம்பளம்: ரூ.19,000-3%-60,000.
6, Technician ‘B’: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ மற்றும் ஓராண்டு முன்அனுபவம். சம்பளம்: ரூ.19,000-3%-60,000.
வயது: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கும், டெக்னீசியன் பணிக்கும் பொதுப் பிரிவினருக்கு 31.10.2024 அன்று 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். www.celindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2024.
The post சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை appeared first on Dinakaran.