சென்னை: சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி நடப்பதால் நேற்று 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, காலையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதேநேரம் சென்ட்ரல் - எண்ணூர், மீஞ்சூர் வரையில் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.