ராயக்கோட்டை, ஜன.19: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் சாமந்திப்பூ, மீராபால் என்னும் பட்டன் ரோஸ், பன்னீர்ரோஜா மற்றும் செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்கின்றனர். இங்கிருந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு, வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக செண்டுமல்லி பூக்கள் திருமண முகூர்த்தங்கள், விழாக்கள் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், விலை குறையாமல் விற்பனையாகி வருகிறது. தற்போது, மார்க்கெட்டுகளில் செண்டு சாமந்தி கிலோ ₹160 வரையிலும், மஞ்சள் சாமந்தி ₹120 வரையும், வெள்ளை சாமந்தி ₹100 வரையும், மீராபால் என்னும் பட்டன் ரோஸ் ₹200க்கும் விற்பனையாகி வருகிறது. மாலை கட்டுவதற்கு மட்டுமே பயன்படும் செண்டு மல்லி மட்டும் கிலோ ₹40க்கு நேற்று விற்பனையானது. ஆனாலும், மற்ற பூக்களை விட, செண்டுமல்லி பூக்களே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
The post செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.