தேவையான பொருட்கள்:
ஆப்பிள்கள் – 4 (தோல் சீவி, வெட்டியது)
சர்க்கரை – 1 கப்
நெய் – ¼ கப்
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
ஃபுட் கலர் – விருப்பப்படி
வேர்கடலை துண்டுகள் – அலங்கரிக்க
செய்முறை:
முதலில் ஆப்பிள் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து விழுதாக ஆக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, அரைத்த ஆப்பிள் விழுதை அதில் சேர்த்து, அருமையான மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.இந்த கலவை கெட்டியாகும்வரை வதக்கி . கலவை நன்றாகக் கெட்டியாகும்போது, ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும். விரும்பினால் ஃபுட் கலரையும் சேர்க்கலாம். அல்வா முற்றிலும் சுண்டி, தொட்டால் கையில் ஒட்டாதபோது அடுப்பில் இருந்து எடுத்துவிடவும். காய்ந்த வேர்க்கடலை துண்டுகள் கொண்டு அலங்கரித்து சூடாக அல்லது குளிர்ச்சியாக பரிமாறலாம். இந்த செட்டிநாடு ஆப்பிள் அல்வா சுவையை அனுபவித்து பாருங்கள். மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
The post செட்டிநாடு ஆப்பிள் அல்வா appeared first on Dinakaran.