தேனி, பிப். 10: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் தேனி மாவட்ட கலையின் சார்பில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணை சேர்மன் மகாராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் ஷேக் இப்ராகிம், நிர்வாக குழு உறுப்பினர்கள் மணி, முகமதுபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் ரெட்கிராஸ் வரலாறு அடிப்படைக் கொள்கைகள், ஜெனிவா உடன்படிக்கைகள், கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் செயல்பாடுகள், ரத்ததானம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் பயிற்சியளித்தனர். இதில் ஜூனியர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் செல்வன், பார்த்திபன், ஜெகநாதன், சிறுமலர், மீனாம்பிகை, ஜோதி மற்றும் போதை பொருள் தடுப்பு ஆய்வாளர் தனலட்சுமி கலந்து கொண்டனர். பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் செயலாளர் சுருளிவேல் செய்தார்.
The post செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் appeared first on Dinakaran.