செங்கோட்டை,ஜன.11: செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தரை தளம் அமைக்கவும், மேலப்புதூர் பேரூராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம்பாண்டியன், செங்கோட்டை நகர செயலாளர் கணேசன், புதூர் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் முருகையா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராம்பிரகாஷ், பணிமனை தலைவர் கருப்பையா, செயலாளர் முத்துசாமி, விபத்து பிரிவு செயலாளர் மின்னல் நாராயணன், கோமதிநாயகம், சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post செங்கோட்டையில் ரூ.17 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.