தஞ்சாவூர், பிப்.11: செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் ஆலக்குடியில் நின்று ெசல்ல நடவடிக்கை எடுத்த முரசொலி எம்பிக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு ரயில் (வண்டி எண். 16848) தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி ரயில் நிலையத்தில் வரும் 10ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு நின்று செல்லும். இந்த ரயில் ஆலக்குடி ரயில் நிலையத்தில் பிற்பகல் 1.26 மணிக்கு வந்து, 1.27 மணிக்கு புறப்படும். இதேபோல, மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண்.16847) ஆலக்குடி ரயில் நிலையத்தில் பிற்பகல் 2.06 மணிக்கு வந்து நின்று 2.07 மணிக்கு புறப்படும்.
இந்த நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் தொடரும் என திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த அனுமதியைப் பெற்று தந்த தஞ்சாவூர் தொகுதி எம்.பி. முரசொலிக்கு ஆலக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ரயில் உபயோகிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த ரயில் சேவையை நிரந்தரமான பயன்பெற அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் ஆலக்குடியில் நிற்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.