செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி: டெல்லி போலீஸ்

1 week ago 2

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இரு முக்கிய பகுதிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லியில் புகழ் பெற்ற செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்போது, தகவல் அறிந்ததும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) உடனடியாக அந்த இரு இடங்களுக்கும் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

எனினும் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கண்டறியப்படவில்லை. இதன்பின்னர், இந்த தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என தெரியவந்தது என்று தெரிவித்தனர்.

கடந்த மாதம் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு துறையினர் சோதனை செய்தனர். எனினும், எதுவும் கிடைக்கப்பெறவில்லை. டெல்லி மற்றும் நொய்டாவில் கடந்த பிப்ரவரி 7-ந்தேதி பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

ஆனால், அந்த தொலைபேசி அழைப்பு புரளி என பின்னர் தெரியவந்தது. அதற்கு முன்பு டெல்லி முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன. ஆனால், சோதனைக்கு பின்பு அது புரளி என தெரிய வந்தது.

Read Entire Article