செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

6 hours ago 2

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், தீர்த்தங்கரையும் பட்டு, புள்ளி லைன், கிரான்ட் லைன், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம் விளாங்காடுப்பாக்கம், வடகரை, வடபெரும்பாக்கம், சோழவரம், கும்மனூர், காரனோடை, ஆத்தூர், எருமை வெட்டிபாளையம், பெருங்காவூர், அருமந்தை, அலமாதி, பம்மது குளம், பொத்தூர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் வந்து அங்குள்ள பல்வேறு இடங்களில் செல்லும் பேருந்துகளில் சென்று வருகின்றனர். மேலும், பல்வேறு வணிகம் தொழில் செய்து வரும் நிலையில் தினசரி 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜி.என்.டி சாலை, அம்பேத்கர் சிலை எதிரே வாகனங்கள், குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் செல்லாத அளவிற்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், பேருந்து நிலையத்திற்கு பல்வேறு பணிகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள், சாலையின் தடுப்பு கம்பிகளை கடந்து சாலையில் வந்து செல்கிறார்கள். இதனால், ஒருசில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள் வருபவர்களும் இந்த சாலை குறுக்கே செல்வதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, சுமார் 300 மீட்டர் தூரத்தில் இரும்பு நடைபாதை மேம்பாலம் சாலையின் குறுக்கே அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article