புழல்: தமிழ்நாட்டின் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர் என ஒன்றிய அரசை கண்டித்து செங் குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், திமுக தலைமை கழக பேச்சாளர் தஞ்சை கூத்தரசன், மீனவரணி துணை தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், நிர்வாகிகள் மிசா.மதிவாணன் ராமநாதன், ராமகிருஷ்ணன், அறிவழகி பாலகிருஷ்ணன், கர்லப்பாக்கம் ராஜேந்திரன், மண்டலக்குழு தலைவர்கள் நந்தகோபால், தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் துக்காராம், வை.மா.அருள்தாசன், புழல் எம்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் வடகரை அற்புதராஜ், சோழவரம் வே.கருணாகரன், வில்லிவாக்கம் தயாளன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன் குமார், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ஆர்.டி.குமார், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் புழல் பி.சரவணன், விளாங்காடுப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் பாரதி சரவணன், புழல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செ.யுவராஜ், செங்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கா.கு. இலக்கியன், எஸ்.கார்த்திக், கோடீஸ்வரன், புழல் என்.சரவணன், க.யுவராஜ், மேனகா நித்யானந்தம், ஜெய் மதன், விப்ர நாராயணன், நா.ஜெகதீசன், திராவிட டில்லி மற்றும் கவுன்சிலர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, வெள்ளிசெங்கோலும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார் வெள்ளி வீரவாளும், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் எம்.நாராயணன் சிங்கக்குட்டி சிலையும் வழங்கினர்.
கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தேர்தலுக்கு முன்பு 9 முறை தமிழ்நாட்டிற்கு வந்த மோடி, தேர்தலுக்கு பிறகு ஒரு முறையாவது வந்தாரா? தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிடிக்காமல் ஆளுநர் மூலம் இடையூறு செய்கின்றனர். எந்த மசோதாவை அனுப்பினாலும் திருப்பி அனுப்புகிறார், ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லையோ, அதேபோல தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்பது இல்லை. தமிழ்நாட்டின் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
The post செங்குன்றத்தில் திமுக பொதுக்கூட்டம்; தமிழ்நாட்டின் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.