செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பாலூரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, சிறையில் அடைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக வரும் தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில், செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் லட்சுமிபதி தலைமையிலான காவலர் குழுவினர், செங்கல்பட்டு அடுத்த பாலூர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக நான்கு இளைஞர்கள் வந்தள்ளனர். போலீசார் வாகன தணிக்கையில் இருப்பதை கண்டதும் தப்பிக்க முயன்றுள்ளனர். சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு உடைமைகளை பரிசோதனை செய்தனர். அதில், 2 கிலோ கஞ்சா பண்டல்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பாலூர் காவல்நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், நான்கு பேரும் காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கூட்ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், ஐய்யப்பன், ராமகிருஷ்ணன் மற்றும் சந்தோஷ் என்பதும் கஞ்சா விற்பனைக்காக வாங்கி சென்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து அவர்கள் நான்கு பேர்மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செங்கல்பட்டு அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது: 2 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.