செங்கம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் அரசு அதிகாரிகளுடன் கலெக்டர் கள ஆய்வு

1 day ago 2

செங்கம், ஏப். 2: செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று செங்கம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருடன் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டார்.

செங்கம் ஒன்றியம் புதுப்பாளையம் ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நடைபெற்று வரும் திட்ட பணிகள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பாரத பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், கலைஞர் கனவு இல்லம் வீடு வழங்கும் திட்டம் மற்றும் சாலை பணி அங்கன்வாடி பள்ளி கட்டிடம், ரேஷன் கடை போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,

குறித்த காலத்தில் பணிகளை முடிக்கவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பயனாளிகள் கட்டி முடித்த வீடுகளுக்குரிய தொகையை விரைந்து வழங்க வேண்டும் எனவும் ஆய்வின்போது தெரிவித்தார். செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மிருலாளினி மரியதேவ்வானந், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத் நிர்மலா உட்பட பலர் உடனருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செங்கம் பெண்கள் அரசு பிற்படுத்தப்பட்ட விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உணவு பண்டங்கள் இருப்பு மற்றும் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை சமைப்பது மற்றும் பரிமாறுவது நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் பாடம் குறித்தும் தேர்வு முறைகளை குறித்தும் கேட்டறிந்து தேர்வினை எழுவது மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

அப்போது வட்டாட்சியர் முருகன், துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் அலுவலர் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உட்பட அரசு துறை அதிகாரிகள் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

The post செங்கம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் அரசு அதிகாரிகளுடன் கலெக்டர் கள ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article