
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி, செங்கம் நகராட்சிக்கு கூட்டிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை இணைத்து புதிதாக கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கத்திற்கு மத்திய அரசின் நிதி கோரப்பட்டுள்ளது.
புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கத்தின்போது செங்கம் நகராட்சியும் இந்த திட்டத்தில் பலனடையும். திருவண்ணாமலை நகரத்திற்கு குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ளன. அந்த குடிநீர் குழாய்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது' என்றார்.