ஸ்ரீகாகுளம்: செகந்திராபாத் – ஹவுரா விரைவு ரயிலில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா ரயில் நிலையத்தை பலக்னுமா விரைவு ரயில் அடைந்தது. அப்போது ஃபலக்னுமா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலில் எஞ்சின் மட்டும் தனியாக கழன்று சென்றதை பயணிகள் கவனித்தனர்.
இதையடுத்து ரயில் எஞ்சின் மட்டும் தனியாக பிரிந்தது குறித்து பயணிகள் ரயில்வே அதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பயணிகள் எச்சரிக்கை செய்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தனியாக பிரிந்து சென்ற எஞ்சின் பெட்டி பின்னோக்கி இயக்கி பெட்டிகளுடன் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்த எஞ்சினை பெட்டிகளுடன் இணைக்கும் பணி சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக அடுத்தடுத்து வரக்கூடிய ரயில்களும் காலதாமதமாக புறப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post செகந்திராபாத் – ஹவுரா விரைவு ரயிலில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக பிரிந்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.