செகந்திராபாத் -ஹவுரா விரைவு ரயிலில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக பிரிந்ததால் பரபரப்பு

1 week ago 7

ஹைதராபாத்: செகந்திராபாத் -ஹவுரா விரைவு ரயிலில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபலக்னுமா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலில் எஞ்சின் மட்டும் தனியாக கழன்று சென்றதை பயணிகள் கவனித்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா ரயில் நிலையத்தை பலக்னுமா விரைவு ரயில் அடைந்தபோது எஞ்சின் தனியாக பிரிந்தது. ரயில் எஞ்சின் மட்டும் தனியாக பிரிந்தது குறித்து பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பயணிகள் எச்சரிக்கை செய்ததை அடுத்து ரயில் எஞ்சினை பின்னோக்கி இயக்கி பெட்டிகளுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.

The post செகந்திராபாத் -ஹவுரா விரைவு ரயிலில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக பிரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article