
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சந்து மொண்டேட்டி . இவர் தற்போது இயக்கியுள்ள படம் 'தண்டேல்'. நாக சைதன்யா, சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
இப்படத்தையடுத்து, சந்து மொண்டேட்டி சூர்யாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவுடனான தனது படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை சந்து மொண்டேடி வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறுகையில்,
'இது பெரிய கதையாக இருக்கும். இப்படத்தின் மீது நீங்கள் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்திருக்கலாம். கதையில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். சூர்யா போன்ற ஒரு நடிகரால் இந்த கதையை வெற லெவலுக்கு கொண்டு செல்ல முடியும். இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்' என்றார்.
தற்போது சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இது தவிர, வெற்றிமாறன் இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்.