'சூர்யா 46' படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

13 hours ago 3

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த 19-ந் தேதி சூர்யா 46 படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், 'சூர்யா 46' படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Here's a sneak peek into the Pooja Ceremony of the much-awaited #Suriya46https://t.co/FDKAzRhk7x Shoot begins at the end of May!️ Catch it in theaters Summer 2026!@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NimishRavipic.twitter.com/Evd4bam1TB

— Sithara Entertainments (@SitharaEnts) May 22, 2025
Read Entire Article