சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார். இவர் ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட கேங்ஸ்டர் திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த கையோடு தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக வரும் தகவல் படி இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை 'சூர்யா 44' படம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார் பூஜா ஹெக்டே. கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். சூர்யா 44 திரைப்படம் ஏறத்தாழ இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் செய்தியாளர் 'சூர்யா 44' திரைப்படம் குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சூர்யா ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த வருடம் சம்மரில் சூர்யா 44 திரைப்படம் வெளியாகும். இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும்' என்று கூறப்படுகின்றது. அனேகமாக டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்து இருக்கின்றார். இப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் எனவும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தி தற்போது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதற்கு காரணம் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததுதான். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் சூர்யாவிற்கு அடுத்த திரைப்படமாவது வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.