சூரியனை ஆய்வு செய்ய ஏவப்படும் இரட்டை செயற்கைக்கோள்கள்

4 months ago 17
சூரியன் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன், இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி செயற்கைக்கோள்கள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. புவியில் இருந்து அதிகபட்சமாக 60,530 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Read Entire Article