சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த படக்குழு

3 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு 'மாமன்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The first look of #Maaman coming up tomorrow at 6.30 PM! Stay tuned for the excitement ahead! Directed by @p_santh A @HeshamAWmusic Musical Produced by @kumarkarupannanof @larkstudios1 @AishuL_ @DKP_DOP @g_durairaj @thecutsmaker @MaheshMathewMMS @dineshashok_13pic.twitter.com/T9M0jLSRie

— Actor Soori (@sooriofficial) January 15, 2025
Read Entire Article