ஈரோடு : ஈரோடு சூரம்பட்டி, 2ம் நம்பர் பஸ்ஸ்டாப் அருகில் தெற்கு காவல் நிலையத்தின் பின்புறம் உள்ளது லெனின் வீதி.
இந்த வீதியில் உள்ள பிரதான சாக்கடை, கூட்டுறவுத்துறை அலுவலகம் அருகில் வளைந்து செல்லும் இடத்தில் சாக்கடை முழுவதும், பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட பிற கழிவுகளால் நிரம்பி வழிகிறது.இதனால், சாக்கடை கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டு அப்பகுதியில் தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.இப்பகுதியில், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், சந்தை மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சாக்கடை, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிவதால் கடுமையான சுற்றுபுறச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்தப் பகுதியில் சாக்கடை கழிவுகளை விரைவில் அகற்றிடவும், பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் சாக்கடைகளில் வீசிச்செல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சூரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழியும் சாக்கடை appeared first on Dinakaran.