சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

2 months ago 14

தூத்துக்குடி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திருச்செந்தூரில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.

2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

இதனைக் காண தமிழகத்தின் பல்வெறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, வரும் 6-ந்தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து 7-ந்தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc ஆப் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Read Entire Article