ஜாக்ரப்: குரோஷியாவில் நடந்த சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் செஸ் போட்டியில் பிளிட்ஸ் பிரிவில் அசத்தலாய் ஆடிய உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். குரோஷியாவின் ஜாக்ரப் நகரில் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் செஸ் போட்டிகள் நடந்தன. ஏற்கனவே முடிந்த ரேபிட் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் முதலிடம் பிடித்தார். அதன் பின் நடந்த பிளிட்ஸ் அதிவிரைவு செஸ் போட்டியில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை குவித்தார். போட்டிகளின் முடிவில் ஒட்டு மொத்தமாக 36 புள்ளிகளில், 22.5 புள்ளிகள் பெற்ற கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ, 20 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். அதேசமயம், ரேபிட் போட்டியில் முதலிடம் பிடித்த குகேஷ் பிளிட்ஸ் போட்டிகளில் திணறினார். ஒட்டு மொத்தத்தில் குகேஷ் 19.5 புள்ளி பெற்று 3ம் இடம் பிடித்தார்.
The post சூப்பர் யுனைடெட் செஸ் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன்: குகேஷுக்கு 3ம் இடம் appeared first on Dinakaran.