'சூப்பர் மேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

4 weeks ago 8

காமிக் கதைகளில் புகழ்பெற்ற கற்பனை கதாபாத்திரம் 'சூப்பர் மேன்'. இந்த சூப்பர் மேன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 1970-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டு இருக்கின்றன. சூப்பர் மேன் கதாப்பாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் கடைசியாக (2016) நடித்திருந்தார்.

டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டார். இந்த நிலையில் 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தற்போது டிசி நிறுவனத்துக்காக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது புதிய சூப்பர் மேன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார். இப்படத்தில் நிக்கோலஸ் ஹோல்ட் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர், ஜேம்ஸ் கன் தனது எக்ஸ் தளபக்கத்தில் 'சூப்பர் மேன்' படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி வெளியாகும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் ரீசர் வருகிற 19-ந் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசி நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேம்ஸ் கன் இயக்கிய முதல் படம் என்பதால், படத்தின் மீது உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Look up. #Superman only in theaters July 11. pic.twitter.com/hXaGAtRAGB

— James Gunn (@JamesGunn) December 16, 2024
Read Entire Article