'சூது கவ்வும் 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்

2 days ago 2

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. இந்த படத்திற்கு 'சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி சிவா' நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் வருகிற 13-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, டிரெய்லர் வருகிற 3-ந் தேதி வெளியாக உள்ளது.

Before the Ultimate Laughter-Riot Feast Begins Feel the Hilarious Vibes with #SoodhuKavvum2Trailer on Dec 3#SoodhuKavvum2: நாடும் நாட்டு மக்களும் #SoodhuKavvum2FromDec13@ThirukumaranEnt @icvkumar @thangamcinemas @cinemas56492 @actorshiva #Karunakaran @HarishaJestin pic.twitter.com/d6qoU6q9BW

— Thirukumaran Entertainment (@ThirukumaranEnt) December 1, 2024
Read Entire Article