சுல்தான் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

3 months ago 17

ஜோஹர்,

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பேட்ரிக் ஆண்ட்ரூ (29-வது நிமிடம்) ஒரு கோலும், டேகின் ஸ்டேஞ்சர் (33, 39 மற்றும் 53-வது நிமிடம்) ஹாட்ரிக் கோலும் அடித்தனர். இந்திய அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் இந்தியா 0-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

ஆனாலும் 9 புள்ளியுடன் முன்னணியில் இருக்கும் இந்திய அணி கடைசி லீக்கில் நியூசிலாந்தை நாளை சந்திக்கிறது.

Read Entire Article