சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மலர்ந்த காதல்... கல்லூரி மாணவி, வாலிபருடன் ஓட்டம்

6 hours ago 2

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஒரு மலைக் கிராமத்தை சேர்ந்த மாணவி குலசேகரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரி விடுதிக்கு சென்ற மாணவி, விடுதி காப்பாளரிடம் தனக்கு உடல்நலம் சரியில்லையென கூறி விடுதியில் இருந்துள்ளார்.

பின்னர் மதியம் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி விடுதியை விட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரிக்கு வெளியே வந்து நின்ற ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். இந்த நிலையில் மாணவி கல்லூரிக்கு வரவில்லையென கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வந்து மாணவியை பல இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவியின் தந்தை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபருடன் மாயமானது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு மாணவி பிளஸ்-2 படித்துக் கொண்டிருந்த நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கோதையாறு பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது அந்த பகுதி வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மாணவியிடம், ஒரு வாலிபர் பேச்சுக் கொடுத்து அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் மனதைக் கொள்ளை கொள்வதாக கூறியுள்ளார். மேலும் அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களைக் குறித்தும் விசாரித்துள்ளார். அப்போது அந்த மாணவி இயல்பாக அந்த வாலிபருடன் பேசியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர், மாணவியின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஊருக்கு சென்ற வாலிபர் தொடர்ந்து அந்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்து நட்பை வளர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் மாணவி, அந்த வாலிபரை வரவழைத்து அவருடன் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

Read Entire Article