ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ராஜஸ்மந்தில் தனியார் பள்ளி சார்பில் சுற்றுலாவுக்கு நிர்வாகத்தின் பேருந்தில் 62 மாணவர்கள் உள்பட 70 பேர் அழைத்து செல்லப்பட்டனர். டெசூரி நல் என்ற பகுதி சாலையில் அந்த பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை வளைவு ஒன்றில் திரும்ப முயன்றபோது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பேருந்தின் ஒருபகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் 3 மாணவிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே செத்தனர். படுகாயம் அடைந்த 25 மாணவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.