கரூர், ஜன. 21: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, மத்திய அரசின் சூழல் வளம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் கல்வித் திட்டம், தேசிய பசுமை படை, நிலையான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடுத்தல், காற்று நீர் மாசுபடுவதை தடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய வகையில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இந்த பிரச்சார வாகனம், கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டுச் சென்றது.கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த பிரச்சார வாகனம் சென்று பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நேற்று தனது பயணத்தை துவங்கியுள்ளது.
அதன்படி, பிளாஸ்டிக் ஒழிப்புணர்வு வாசகங்கள், மழைநீர் சேகரிப்பு, காலை நிலை மாற்றம் ஏற்பட காரணங்கள், அதனை தடுக்கும் முறைகள், காற்றின் மாசுக்கான காரணங்கள், மின்சாரம் சேமிப்பின் அவசியம், நீர் மாசுபாடு தடுக்கும் முறைகள், பல்லுயிர் பெருக்கம், நீர்பாதுகாப்பின் அவசியம் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரச்சார வாகனம் மாவட்டம் முழுதும் பயணிக்கிறது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.