சென்னை: சுய சான்றுத் திட்டம் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து, சுமார் 8 மாதத்தில் 71,128 பேர் அனுமதி பெற்றுள்ளனர் என அமைச்சர் முத்துசாமி ெதரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானியக்கோரிக்கைகளுக்கு அமைச்சர் முத்துசாமி பதிலளித்து பேசியதாவது:
சுய சான்றுத் திட்டம் என்பது, 2,500 சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் 3,500 சதுர அடி கொண்ட கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற அரசு அதிகாரிகளைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுயமாக அந்தச் சான்றை நீங்களே எடுத்து, ஆன்லைனில் விண்ணப்பித்தால், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்து 8 மாத காலம் ஆகிறது. அந்தத் திட்டம் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து, சுமார் 8 மாத காலத்தில் ஏறத்தாழ 71,128 பேர் அத்திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றப்பட்டுள்ளது.
வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக, இன்று வரை ரூ.4,992.25 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, 18,528 அலகுகள், அதாவது வீடுகளோ, மனைகளோ உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடுத்து மிக முக்கியமான ஒரே ஒரு திட்டம். அதாவது வீட்டு வசதி வாரியத்தால், 40 ஆண்டு காலத்திற்கு முன்னால், வெறும் நோட்டீஸ் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, அவர்கள் கொடுத்தது, இந்த நிலத்தை எடுக்கலாம் என்ற ஓர் உத்தேசம் செய்யப்படுகிறது. அதுபோன்று 10,047 ஏக்கருக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னால், உத்தேசம் செய்யப்பட்ட காரணத்தினால், அந்தச் சொத்து அவர்களுடையதுதானா என்பதில் அவர்களுக்கு சந்தேகம். ஆனால், இவையெல்லாம் வெளியில் விளம்பரமாக தெரியாத காரணத்தால், பல பேருக்கு அது விற்கப்பட்டுவிட்டது.
இன்றைக்கு பல லட்சம் பேர் அதனை வாங்கியிருக்கிறார். ஆனால், அது அவர்களுக்கு உரிமையாகவில்லை. முதல்வரின் கவனத்திற்கு வந்த உடன் அந்த 10,047 ஏக்கரையும் விடுவிக்க வேண்டுமென்று ஒரே ஒரு சுற்றறிக்கை அனுப்பி, அதனை விடுக்கப்பட்டது. அதில் பல லட்சம் பேர், ஏறத்தாழ 21 லட்சம் பேர் அந்த ஒன்றில் மட்டும் பயன்பெற்றுள்ளனர்.
35 முதல் 40 ஆண்டு காலமாக பல ஆயிரம் பேர் கடனை வாங்கி வீடு கட்டியுள்ளனர். ஏறத்தாழ 5933 ஏக்கரில் 3,710 ஏக்கர் தற்போது விடுவிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் போடப்பட்டிருக்கிறது. அவர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான ஓர் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அந்த அறிக்கையை வைத்து அந்தப் பணி மேற்கொள்ளப்படும். இது பாதிக்கப்பட்ட பல லட்சம், ஏறத்தாழ 4 லட்சம் குடும்பங்கள் இதிலிருந்து தப்பித்து வெளியிலே வந்துள்ளனர்.
இன்றைக்கு ஏறத்தாழ 35 ஆண்டு காலத்திற்கு பின்னால், முதல்வர் அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.
The post சுய சான்று திட்டத்தின் கீழ் 8 மாதங்களில் 71,128 பேருக்கு அனுமதி : அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.