
புதுடெல்லி,
கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், அவர்களது வாழ்க்கை துணையின் சொத்து மதிப்புகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக கோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.