சுதர்சன் – படிக்கல் அபார ஆட்டம் இந்தியா ஏ முன்னிலை

2 weeks ago 4

மெக்கே: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது, 4 நாள்), சாய் சுதர்சன் – தேவ்தத் படிக்கல் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றது. கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீசியது. பிரெண்டன் டாக்கெட் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னுக்கு சுருண்டது (47.4 ஓவர். படிக்கல் 36, நவ்தீப் சைனி 23, சுதர்சன் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர் (கேப்டன் ருதுராஜ், நிதிஷ் குமார், பிரசித் டக் அவுட்).

ஆஸி. ஏ பந்துவீச்சில் டாக்கெட் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய ஆஸி. ஏ அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்திருந்தது. கேப்டன் மெக்ஸ்வீனி 29, கூப்பர் 14 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மெக்ஸ்வீனி 39, கூப்பர் 33 ரன்னில் வெளியேற… அடுத்து வந்தவர்களில் டாட் மர்பி 37 ரன் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேற ஆஸி. ஏ முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (62.4 ஓவர்).

இந்திய தரப்பில் முகேஷ்குமார் 6, பிரசித் கிருஷ்ணா 3, நிதிஷ் ரெட்டி ஒரு விக்கெட் எடுத்தனர். 88 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா ஏ 2வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ருதுராஜ் 5, ஈஸ்வரன் 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இந்தியா ஏ 8.5 ஓவரில் 30 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சாய் சுதர்சன் – தேவ்தத் படிக்கல் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 2வது நாள் முடிவில் இந்தியா ஏ அணி 2வது இ ன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்துள்ளது.

சுதர்சன் 96, படிக்கல் 80 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, 120 ரன் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஏ அணி 3ம் நாளான இன்று பெரிய ஸ்கோர் அடித்து இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சுதர்சன் – படிக்கல் அபார ஆட்டம் இந்தியா ஏ முன்னிலை appeared first on Dinakaran.

Read Entire Article