தேவையான பொருட்கள்:
கடலை மாவு-1/4 கிலோ.
சுண்டைக்காய்-1/4 கிலோ.
கடலை எண்ணெய்-1/2 லிட்டர்
பூண்டு-7.
சோம்பு-1 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-6
பெருங்காயம்-சிறுதுண்டு.
இஞ்சி-சிறுதுண்டு.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை
முதலில் சுண்டைக்காய் ¼ கிலோவை நறுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு அலசி வைத்துக்கொள்ளவும். சோம்பு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 6 நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.இப்போது இஞ்சி சிறுதுண்டு, பெருங்காயம் சிறுதுண்டு, பூண்டு 7 ஆகியவற்றை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் கடலை மாவு ¼ கிலோவை சேர்த்து அதில் அரைத்து வைத்த இரு கலவைகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும். பிறகு சுண்டைக்காயை சேர்த்துவிட்டு தண்ணீர் சிறிதளவு விட்டு பகோடா மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.கடாயில் கடலை எண்ணெய்யை ஊற்றி நன்றாக சூடானதும் மாவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மொறு மொறு சுண்டைக்காய் பகோடா தயார்.
The post சுண்டைக்காய் பகோடா appeared first on Dinakaran.