கோடை காலம் தொடங்கிய நாளிலிருந்து காரைக்கால் மாவட்டத்தில் சராசரி விகிதத்தை விட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.தற்பொழுதே 36 டிகிரி முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகின்றன.வெயிலுடன் இறுக்கமான சூழலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத வெப்பநிலையாக மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவானது.மேலும் கடற்கரை ஓரங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் சுமார் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பொதுமக்களால் உணரப்படுகிறது.நேற்று அதிக அளவில் வெப்ப அலை வீசியதால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலோடும் மற்றும் நீரிழப்பால் கடும் சிரமங்களுக்கிடையே பயணம் செய்தனர்.
பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மதியம் 11 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர். மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை மேலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் உயரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.வெயில் தாக்கத்தை சமாளிக்க சாலையோர நுங்கு,இளநீர்,மோர் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட இயற்கை பானங்களை நாடி பொதுமக்கள் செல்கின்றனர்.அதீத வெப்பத்தால் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு நீரிழப்பு நோய்கள் மற்றும் பக்கவாதம் சார்ந்த நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post சுட்டெரித்த வெயில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் முதியவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.