நன்றி குங்குமம் டாக்டர்
*இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பதுதான் சுக்கு. சுக்கில் இருக்கும் காரத்தன்மை ஜீரணத்துக்குப் பிறகு மீதமிருக்கும் பித்தநீரை சமன் செய்கிறது.
*நெஞ்சுவலி அடிக்கடி வந்தால் இளநீரில் சுக்குப்பொடி மற்றும் சர்க்கரை கலந்து பருகிவர உடனடி பலன் கிடைக்கும்.
*அஜீரணத்தைப் போக்கும். வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
*சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சிக் குடித்துவர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
*ரத்தக் குழாய்களின் செயலை மேம்படுத்தி இதய இயக்கத்தை வலுவாக்குவதில் உதவி புரிகிறது.
*சுக்கு, மிளகு, கொத்தமல்லி விதை, திப்பிலி, சித்தரத்தை இந்த ஐந்தையும் இட்டு கசாயம் செய்து குடித்துவர கடுஞ்சளி மூன்றே நாளில் குணமாகும்.
*கடுகளவு சுக்குப் பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேனும், எலுமிச்சைசாறும் சேர்த்து நாள்தோறும் உண்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*சுக்கு பொடியோடு ஒரு சில பூண்டு பற்களைச் சேர்த்து கொதிக்கவைத்து ஆவிபிடிக்க ஆஸ்துமா தணியும்.
*பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
*மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு சுக்கு நல்ல பலன் தரக்கூடியது. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
*சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
*பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு கருப்பை இயல்பு நிலைக்கு வரவும், பால் சுரப்பை தூண்டவும் சுக்கு உதவுகிறது.
*சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்து புண், காயம் உள்ள இடங்களில் தடவினால் விரைவில் குணமாகும்.
*தலைவலி, மண்டைப்பிடி போன்றவற்றுக்கு சுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
*சளி, காய்ச்சல், தொண்டைக் கரகரப்பு, குரல்வளையில் பிரச்னை, காது அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு சுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.
தொகுப்பு: ஆர்.கே.லிங்கேசன்
The post சுக்கின் மருத்துவ குணம்! appeared first on Dinakaran.