சுக்கின் மகத்துவம்!

7 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் 3ல் ஒரு பங்கு சுக்கு ஒன்றாகும்.

*சுக்குடன் சிறிது சுண்ணாம்பு, சிறிது மிளகு சேர்த்து மை போல் அரைத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.

*சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை சம அளவு எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்கு கொதித்த பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து லேசான சூட்டுடன் பருகினால் நீண்ட நாள் சளி தொல்லை குணமாகும்.

*சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து நீரில் காய்ச்சி சுக்கு காபியாக குடிக்க உடல் சோர்வு, தொண்டை கரகரப்பு, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி நீங்கும்.

*சுக்குடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாப்பிட மலக்குடலில் உள்ள தீமை கிருமிகள் அழியும். சுக்குடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சூடேற்றி பருகினால் மூல நோய் குணமாகும்.

சுக்குப்பொடியுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர பல்வலி குணமாகும். ஈறுகளில் ரத்தம் கசிதல் குணமாகும்.

*சுக்கு, மிளகு 5, வெற்றிலை 1 சேர்த்து இடித்து, நீரில் கலந்து குடித்தால் தேள் கடி, பூரான் கடி விஷம் முறியும்.

*சுக்கு, அதிமதுரம், மிளகு சம அளவு எடுத்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலை சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வர முதுகுவலி குணமாகும்.

*சுக்கை பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி உடனே குணமாகும். வலி நீங்கியதும் கழுவி விடவேண்டும்.

*சுக்குப் பொடி சிறிது வெந்நீரில் 10 நிமிடம் போட்டு பின் தேன் கலந்து குடிக்க மார்பு எரிச்சல், அஜீரணக் கோளாறு நீங்கும்.

*சுக்குடன் கிராம்பு, சீரகம், ஏலக்காய் சம அளவு எடுத்து பொடியாக்கி, சிறிது தேனில் கலந்து குழைத்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் பொருமல் சரியாகும்.

– எம்.வசந்தா, சென்னை.

The post சுக்கின் மகத்துவம்! appeared first on Dinakaran.

Read Entire Article