கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அமர்க்கள வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசி. பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாக். துவக்க வீரர்கள் முகம்மது ஹேரிஸ், ஹஸன் நவாஸ் ஆகிய இருவரையும் ரன் எடுக்க விடாமல், நியூசி பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன், ஜேகப் டஃபி அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தனர்.
பின் வந்த கேப்டன் சல்மான் ஆகா 18 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்தோரில் குஷ்தில் ஷா (32 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. அதனால், 18.4 ஓவரில் பாக். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன் மட்டுமே எடுத்தது. நியூசி தரப்பில் ஜேகப் டஃபி 4, கைல் ஜேமிசன் 3, இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து 92 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. துவக்க வீரர் டிம் ஷெபெர்ட் 44 ரன் குவித்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ஃபின் ஆலன் 29, டிம் ராபின்சன் 18 ரன் அவுட்டாகாமல் எடுத்தனர். அதனால், 10.1 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 92 ரன் குவித்த நியூசி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கைல் ஜேமிசன் ஆட்ட நாயகன்.
The post சீறிய பந்தில் சிதறிய விக்கெட் பஞ்சரானது பாகிஸ்தான் ஈசியாய் வென்றது நியூசி: முதலாவது டி20 போட்டி appeared first on Dinakaran.