சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்: வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் பினராயி விஜயன் புகழாரம்

5 months ago 16

சென்னை: ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்​மை​யானவர் பெரி​யார்’ என்று பெரி​யார் நினை​வகம் திறப்பு விழா​வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்​டி​னார்.

கேரள மாநிலம், கோட்​டயம் மாவட்​டம், வைக்​கத்​தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்​டத்​தின் நூற்​றாண்டு நிறைவு விழா​வில், பெரி​யார் நினை​வகம், நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசி​ய​தாவது: சமூக சீர்​திருத்​தவா​தி​களில் முதன்​மை​யானவர் பெரி​யார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’ என்று அழைப்​பது​போல், தமிழக மக்கள் ஈ.வெ.ராவை ‘பெரி​யார்’ என்று அழைக்​கின்​றனர். ‘பெரிய’ ஆள் என்ற சொல்​தான் பெரி​யாராக மாறியது. சுதந்​திரம் மற்றும் சமூக சீர்​திருத்த சிந்​தனை​யாளரான பெரி​யார், உழைப்​பாளி வர்க்​கத்​தினர், கம்யூனிஸ்ட் அமைப்​பினருடன் இணைந்து போராட்​டங்களை முன்னெடுத்​தார். எம்.சிங்​கார​வேலு, ப.ஜீவானந்தம் ஆகியோ​ருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்​தார்.

Read Entire Article