சீர்காழி,பிப்.10: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் ஆதிராகு கோயில் என்று அழைக்கப்படும் பழமையான புகழ்பெற்ற பரிகாரதலமான புன்னாக வள்ளி உடனாகிய நாகேஸ்வர முடையார் கோயிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று (10-ம் தேதி) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனம் யாக சாலை பூஜை மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அப்போது தமிழ்ச்சங்க தலைவர் பொறியாளர் மார்கோனி, கோயில் நிர்வாகி செந்தில், திமுக நகர செயலாளர் சுப்பராயன், நகர மன்ற கவுன்சிலர்கள் பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், ரமாமணி, மற்றும் கோவி நடராஜன், தன்ராஜ், துரை, வீரபாண்டியன், செல்வ முத்துக்குமார், மஞ்சுளா இளங்கோவன், ராஜசேகர் மோகன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள், நன்கொடையாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள். ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
The post சீர்காழியில் நாகேஸ்வரமுடையார் கோயிலில் தருமபுர ஆதீனம் வழிபாடு appeared first on Dinakaran.