சீர்காழியிலிருந்து மதுரைக்கு 2,000 டன் நெல் அரவைக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

1 day ago 2

சீர்காழி, ஜன.30: சீர்காழியில் இருந்து 2,000 டன் நெல்மூட்டைகள் அரவைக்காக மதுரைக்கு சரக்கு ரயில்பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் கோபிநாத் ஆலோசனையின் பேரில் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு 58 ரயில் பெட்டிகள் மூலம் 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தொழிலாளர்கள் மூலம் மதுரைக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post சீர்காழியிலிருந்து மதுரைக்கு 2,000 டன் நெல் அரவைக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article