சீரமைக்கப்பட்ட கோயிலில் மழைநீர் கசிவால் அவதி

1 month ago 6

கொப்பள் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், சிக்கரம்பூர் அருகே உள்ள பாம்பசரோவரில் உள்ள ஜெயலட்சுமி கோயிலின் கருவறை மற்றும் வளாகத்தில் மழை நீர் கசிவு ஏற்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான ஸ்ரீராமுலு, மாநில பழங்காலத் துறையிடம் உரிமம் பெற்று, தனது சொந்த நிதியான ரூ.2.8 கோடியை பயன்படுத்தி, பம்பசரோவரில் உள்ள ஜெயலட்சுமி கோயில் மற்றும் ஏரியின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.

இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், எந்த அதிகாரிகளிடமும் அனுமதி பெறாமல், சிசிடிவி கேமரா பொருத்தாமல், ஜெயலட்சுமி தேவி சன்னதியை தோண்டி, ஸ்ரீசக்ரா சிலையை பெயர்த்து, தோண்டிய இடத்தில் சிமென்ட் போட்டு மூடி, சீரமைப்பு பணிகளை இரவு பகலாக மேற்கொண்டனர்.

பின்னர் மீண்டும் பல்வேறு பூஜை நிகழ்ச்சிகள் மூலம் சிலைகள் நிறுவப்பட்டு, சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் கோயிலில் நீர் கசிவு ஏற்பட்டது. மழை பெய்யும் போதெல்லாம், கசிவு ஏற்படுகிறது. இதனை தாலுகா நிர்வாகமோ, கோயில் நிர்வாக அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து கசியும் மழைநீரில் கோயில் அர்ச்சகர்கள் அம்மனுக்கு வழிபாடு, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை செய்கின்றனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

The post சீரமைக்கப்பட்ட கோயிலில் மழைநீர் கசிவால் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article