"சீரன்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

3 months ago 31

சென்னை,

ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் துரை கே முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் "சீரன்". சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப் பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இந்த 'சீரன்' உருவாகியுள்ளது.

நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளின் மையம்தான் இந்தப் படத்தின் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன் தந்தையின் உரிமைக்காக போராடுவதுதான் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான அம்சங்களுடன், அருமையான கருத்தை பேசும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டார்.

தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை கே முருகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடிக்க , இனியா , சோனியா அகர்வால் , ஆடுகளம் நரேன் , அஜீத் , கிரிஷா குருப் , சேந்திராயன் , ஆர்யன் , அருந்ததி நாயர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே வேலூரைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் அக்டோபர் 4ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  

Read Entire Article