
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடர் நிறைவடைந்தவுடன் இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்டன் தாஸ் தலைமையிலான அந்த அணியில் முன்னாள் கேப்டனான நஜ்மூல் ஹொசைன் சாண்டோவுக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் முன்னணி வீரர்களான முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம் ஷேக், தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன் பட்வாரி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், ஷக் மஹேதி ஹசன்,நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், முகமது சைபுதீன்.